குமரியில் தியானத்தை நிறைவு செய்தார் மோடி… திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 4:29 pm

குமரியில் தியானத்தை நிறைவு செய்தார் மோடி… திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை!!

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார்.

இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு தயார் செய்யப்பட்டது. தியானத்தில் பிரதமர் மவுன விரதமும் மேற்கொண்டார்.

3வது நாளான இன்று சூரிய நமஸ்காரம் செய்ய தியானத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடி வெளியே வந்தார். மேகமூட்டம் காரணமாக, சூரிய நமஸ்காரம் செய்யாமல், பிரதமர் மோடி மீண்டும் உள்ளே சென்று தியானத்தில் ஈடுபட்டார்.

மாலை 3 மணியளவில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கிளம்பி, படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார்.

அங்கு திருவள்ளுவர் சிலையின் வலது பாதத்தில் மலர் தூவியும், மாலையை வைத்தும் மரியாதை செலுத்தினார். பிறகு சிலையை சுற்றிப்பார்த்தார்.

மேலும் படிக்க: வேறொரு பெண்ணுடன் உல்லாசம்.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!

இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பும் பிரதமர், கரைக்கு சென்று விருந்தினர் மாளிகை செல்ல உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டில்லி செல்ல உள்ளார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…