அடுத்தவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதால் காந்தியை பற்றி மோடிக்கு தெரியவில்லை : பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan3 June 2024, 11:29 am
புதுச்சேரியில் ராஜிவ்காந்தி அறக்கட்டளை சார்பில் ஜவஹர்லால் நேருவின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேருவின் தேசியக் கொள்கைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்…
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ்,
நாட்டின் முதல் பிரதமரை பற்றி பேசுகின்றோம். ஆனால் நான் கடைசி பிரதமர் ஆயிரம் வருடம் இருப்பேன் என்று ஒருவர் தேர்தல் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றார். ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளைப் பேசவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
நேருவின் கல்வி, தொழில் நிறுவனங்கள், அறிவியல் இவைதான் இந்தியாவுக்கு கோயில் என்றார். ஆனால் இப்போதுள்ள தெய்வமகன்(பிரதமர்) படைத்த கடவுளுக்கே வீடு கட்டி அதற்காக வாக்கு போடு என்று கேட்கின்றார்.
இந்தியாவிலேயே நேருவைப் பற்றி அதிகமாக பேசியது இந்த தெய்வமகன்தான். அது ஒரு வியாதி. இப்போது வெளியான Exit Polls வந்து கொண்டிருக்கிறது. அவை இஸ்டத்துக்கும் வெளியிடப்படுகிறது.
மேலும் படிக்க: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. தேர்தல் கருத்துக்கணிப்பு தாக்கமா? சவரன் எவ்வளவு தெரியுமா?
கர்நாடகத்தைச் சேர்ந்த நான் தமிழர்களைப் பற்றி பேசக்கூடாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுவது சரியல்ல.
பிரகாஷ்ராஜ் தமிழனா இல்லையா என்று என்னை செல்லமாக ஏற்றுக்கொண்ட மக்களை கேளுங்கள். நான் கர்நாடாகா காரன்தான்.
ஆனால் நான் இந்தியன். பல மொழிகளில் என்னை வரவேற்கின்றனர். நான் அருமையாக தமிழ்பேசுவதே தமிழை மதிப்பதால் தான். தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு பெற்றதில் பெரிய வரலாற்று போராட்டம் அடங்கியுள்ளது.
அதன்படி அண்ணா 41 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தார். அது கருணாநிதி முதல்வரானதும் 49 ஆனது. அதன்பின் எம்.ஜி.ஆர். முதல்வரானதும் 68 சதவிகிதமானது. பின்னர் மீண்டும் கருணாநிதி முதல்வரானதும் 69 சதவிகிதமானது. அதை மத்திய அரசு 50 சதவிகிதமாக்க முயன்றது. அதைத் தடுக்கவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றம் சென்று அதில் வெற்றி பெற்றார்.
மறைந்த முதல்வர் கருணாநிதி சம்பந்தப்பட்ட விழா என்பதால் அவரை நினைவு கூர்ந்து பேசினேன். ஆனால், ஜெயலலிதாவை குறைத்து பேசவில்லை,அதில் அனைவரது பங்கும் உள்ளது என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்வது அவசியம். தீபம் எரிவதை விட அதை ஏற்றியது உயர்ந்ததாகும் என்று பேசினார்.
காவிரி ஆறு பிரச்சனை மக்கள் பேசும் பிரச்சனை அல்ல. காவிரி ஆறு தொடங்கி முடியும் வரையில் மரங்கள் அழிப்பு, ஆக்கிரமிப்பு, மணல் எடுப்பது என பல பிரச்னைகள் உள்ளன. அதனால் ஆற்று நீர் குறைந்துவிட்டது.
ஆகவே அறிவியல் பூர்வமாக கர்நாடக, தமிழக அரசுகளை இணைத்து அறிவியலாளர்களின் ஆலோசனை பெற்று மத்திய அரசு பேசி, பிரச்னையைத் தீர்க்க வேண்டும். அதனை விடுத்து தமிழனா, கர்நாடகனா என்று பேச வேண்டாம். மொழிக்கும், தண்ணிக்கும் என்ன சம்மந்தம். காவிரி பிரச்னை வந்தால் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாதிப்பதில்லை. ஆனால், அப்பாவிகள் பாதிக்கும் வகையிலே அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.
காவிரி பிரச்சனையை அறிவியல் பூர்வமாக தீர்ப்பதை விடுத்து பிரதமர் தியானமிருக்கின்றார். எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை
நான் மக்களோடு இருக்கின்றேன். தற்போது அரசியல் தொழிலாகிவிட்டது குற்றச்சாட்டு முன்வைத்தார்.
தனி ஒரு ஆளாக பிரதமரை பற்றி கருத்து தெரிவிப்பது குறித்து கேட்டதற்கு திருடனை திருடன் தான் என்று கூற முடியும்… இவரை வேறென்ன சொல்ல முடியும்… நமக்கெல்லாம் நேருவைப் பற்றி தெரியும், விவேகானந்தரை பற்றி தெரியும் காந்தியை பற்றி தெரியும்… ஏனென்றால் நாம் படித்தவர்கள் படிக்காத பிரதமருக்கு எப்படி தெரியும்..
சொந்த காசில் “காந்தி” படத்தை பார்த்து இருந்தால் மோடிக்கு காந்தி பற்றி தெரிந்து இருக்கும். அவர் மற்றவரின் பாக்கெட்டில் இருந்து தான் பணம் எடுத்து செலவு செய்வார். அதனால் காந்தி குறித்து தெரியவில்லை விமர்சனம் செய்து பேசினார்…