#TNElection… தேர்தலில் பணமழை கொட்டுது.. நியாயமான தேர்தல் கிடையாது.. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 11:21 am

#TNElection… தேர்தலில் பணமழை கொட்டுது.. நியாயமான தேர்தல் கிடையாது.. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையான வாக்குபதிவினை இருமகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த பாமக அன்புமணி ராமதாஸ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக கூட்டணிக்கு சாதகமான அமைதி புரட்சி நடைபெற்று கொண்டிருப்பதாகவும், தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் பாமக கூட்டணி வெற்றி பெறும் எனவும் மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டுமென இயக்கம் இருப்பதால் நிச்சயமாக தங்கள் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார் என தெரிவித்தார்.

சித்திரை மாதம் மாம்பழ சீசன் என்றும் தேர்தல் நியாமாகவும் அமைதியாகவும் நடைபெறுவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுப்பதாக புகார்கள் வருகிறது.

ஆனால் இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கவில்லை அரக்கோணம் பகுதியில் பணம் பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் நடவடிக்கை இல்லை என கூறினார்.

ஆளும் கட்சியினர் அதிகாரிகளை வைத்து கொண்டு பண பட்டுவாடா செய்துள்ளதாகவும், 99 சதவிகித அதிகாரிகள் தமிழ்நாட்டினை சார்ந்தவர்களாக இருப்பதால் அரசு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

தேர்தலில் சட்டங்கள் மாற்றம் கொண்டு வர வேண்டும் வேட்பாளர் பணம் கொடுத்து வாக்கு பெற்றால் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்ற சட்டம் கொண்டு வர வேண்டுமென தேர்தல் விதிகள் தீவிரமாக்க வேண்டுமென கூறினார்.

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் உள்ளது உத்திரபிரதேசம், மஷாராஸ்டிரா போன்ற இடங்களில் இது போன்ற கலாச்சாரம் இல்லை என்றும் நியாமான முறையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை பணம் வைத்துள்ளவர்களுக்கு சாதகமாக கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள்.

ஆனால் இந்த தேர்தலில் பாமகவிற்கு மக்கள் வாக்களிக்க அமைதி புரட்சி நடைபெற்று கொண்டிருப்பதாகவும், 57 ஆண்டுகள் மக்கள் இரு கட்சிகளுக்கு வாக்களித்தது போதுமென மக்கள் முடிவு செய்துவிட்டதால் இந்த தேர்தலில் பிரதிபலிக்குமெம அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் தான்… வாக்கு செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ட்வீட்!

பின்னர் முதன் முதலாக வாக்களித்த அன்புமணி ராமதாஸின் மகள் சஞ்சுமித்ரா செய்தியாளர்களை சந்தித்தபோது முதன்முதலாக வாக்களிப்பது சந்தோஷமாக இருப்பதாகவும் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்க வர வேண்டும் எனவும் தமிழகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள புதிய வாக்காளர்கள் வாக்களிக்கும் போது மாற்றத்தை யார் தருவார்கள் என்று ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதே போல மூத்த மகளான சங்கமித்ரா செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் மாற்றம் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…