கடனை திருப்பிக் குடு இல்லைன்னா: மிரட்டல் விடுத்த நிதி நிறுவனம்: தாயும் மகளும் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!
Author: Sudha8 August 2024, 10:12 am
திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் கற்பகம் இவரது மகள் சுபிக்ஷா.கற்பத்தின் கணவர் குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்.அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து, கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் குகநாதன் வாங்கிய கடனை திரும்ப கேட்டு கற்பகத்தையும் அவர் மக்களையும் நிதி நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. உன் கணவர் வாங்கிய கடனை நீ திருப்பி கொடு; இல்லை என்றால் உன் பொண்ணு கொடுக்கட்டும்”எனக் கூறி டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி போன கற்பகம் மற்றும் அவரது மகள் சுபிக்ஷா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தாய் கற்பகம், மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கத்திலும், கடன் பிரச்சனை காரணமாகவும் மன உளைச்சலிலும் இது போன்ற விபரீத முடிவு எடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.