பேருந்தில் பயணம்: தெரியாமல் நடந்த தவறு: ஐடி இளம் பெண்ணுக்கு சரமாரி அடி உதை…!!
Author: Sudha10 August 2024, 8:25 am
இளம்பெண் ஒருவர் மேடவாக்கத்தில் தங்கி, பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்.மாநகர பேருந்தில் அலுவலகம் சென்று வருவது வழக்கம்.
வழக்கம் போல நேற்று பேருந்தில் பயணம் செய்த போது, திடீரென பக்கத்தில் ஒரு குழந்தையுடன் இருந்த பெண்ணும், அவரது தாயாரும், இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை இரும்புலியூரில் நிறுத்தி, போலீசாருக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தியபோது, மேற்கு வங்க இளம்பெண், தெரியாமல், குழந்தையின் காலை இடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த பெண் மீது, குழந்தையுடன் வந்த பெண் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.