400 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.. இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட கையெழுத்து!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 12:17 pm

சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு தொடர்ச்சியாக இத்தகைய பயணங்களை 4-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்.

அமெரிக்காவில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி