எம்.பி. திருச்சி சிவாவை தேர்தல் குழுவில் இருந்து நீக்கிய திமுக.. சீனியர் தலைவர்கள் அப்செட் : முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2024, 2:48 pm
எம்.பி. திருச்சி சிவாவை தேர்தல் குழுவில் இருந்து நீக்கிய திமுக.. சீனியர் தலைவர்கள் அப்செட் : முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!!
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக தேர்தல் குழு இன்று அறிவிக்கப்பட்டது. எப்போதும் சீனியர் தலைவர்கள் இந்த குழுவில் இடம்பெறுவது வழக்கம்.
குறிப்பாக அமைச்சர் துரைமுருகன், கேஎன் நேரு, எம்பி திருச்சி சிவா பெயர் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை துரைமுருகனின் உடல்நலன் கருதி அவரது பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
திமுகவின் இந்த குழுக்களில் டிஆர் பாலு எம்பி, அவரது மகன் அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகிய இருவருமே இடம் பெற்றுள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
நாடாளுமன்ற முகங்கள் என்கிற பட்டியலில் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவாதான் சீனியர்கள். இவர்களில் திருச்சி சிவா தவிர மூவருமே ஒவ்வொரு குழுவில் இடம் பெற்றுள்ளனர். திருச்சி சிவாவின் பெயர் முதலில் எந்த குழுவிலும் இடம் பெறவில்லை.
இந்த முறை அவரது பெயர் எந்த குழுவிலுமே இல்லை. தேர்தல் அறிக்கையில் கொள்கையை பற்றி தெரியாத சிலருக்கும் கூட வாய்ப்பு கொடுத்திருப்பதை தவிர்த்துவிட்டு திருச்சி சிவாவை சேர்த்திருக்கலாம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திருச்சி சிவா மீது திமுக தலைமைக்கு அப்படி என்ன அதிருப்தியோ என்கிற கேள்வியையும் திமுக சீனியர்களே முன்வைத்த நிலையில், அவரது பெயர் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. திமுகவுக்கு ஏற்பட்ட சலசலப்புக்கு பின் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.