மீண்டும் சீண்டிய கேரளா… முல்லைப்பெரியாறு எங்களோட உரிமை… ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் : தமிழக அரசு பதிலடி

Author: Babu Lakshmanan
18 February 2022, 5:11 pm

முன்லை பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும், தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேரள சட்டமன்றத்தில்‌ இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின்‌ மாண்புமிகு ஆளுநர்‌ அவர்கள்‌ ஆற்றிய உரையில்‌, கேரள அரசு முல்லை டுபரியாறு அணை பகுதியில்‌ புதிய அணை கட்டப்படும்‌ என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள்‌ மூலம்‌ அறியப்பட்டது. இது 07.05.2014 அன்று உச்சநீதிமன்றம்‌ அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும்‌ உச்சநீதி மன்றத்தின்‌ ஆணையை அவமதிப்பதும்‌ ஆகும்‌.

உச்சநீதி மன்றத்தின்‌ ஆணையில்‌ முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும்‌ உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும்‌ புதிய அணை கட்டும்‌ திட்டத்தை தமிழ்நாடு அரசிடம்‌ கேரள அரசு திணிக்க முடியாது என்றும்‌ தெளிவாக கூறியுள்ளது.

இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும்‌ திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக்‌ கொள்ளமுடியாது. இதை எல்லாவிதத்திலும்‌ தமிழ்நாடு அரசு எதிர்க்கும்‌. தமிழ்நாட்டின்‌ உரிமையை எக்காரணம்‌ கொண்டும்‌ விட்டுக்கொடுக்காது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!