முன்லை பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும், தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேரள சட்டமன்றத்தில் இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை டுபரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது 07.05.2014 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்சநீதி மன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும்.
உச்சநீதி மன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.
இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இதை எல்லாவிதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.