பணக்கார ஆண்களை மயக்கி நிர்வாண போட்டோ எடுத்து மிரட்டி பல கோடி மோசடி.. இளம்பெண்ணின் தில்லாலங்கடி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 1:01 pm

பணக்கார ஆண்களை மயக்கி குளிப்னத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாண போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஷீலாநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவில் சில காலமாக தங்கியுள்ளது. முரளிநகரை சேர்ந்த கொருப்ரோ ஜாய் ஜமீமா (28) அவர்களின் மகனை இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு அவர் மூலம் ஷீலாநகரில் உள்ள அவர்களது வீட்டின் முகவரியை தெரிந்து கொண்டார்.

ஷீலாநகரில் இருக்கும் போது அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த ஜாய் ஜமிமா அவரது பெற்றோருடன் கொஞ்ச நாட்கள் நல்ல பெண்ணாக நடித்தார்.

பின்னர் சிறிது நாட்கள் கழித்து உங்கள் மகனை திருமணம் செய்து வைக்கும்படி அந்த இளைஞரின் பெற்றோருடன் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதனால் ஜாய் ஜமிமா முதல் திட்டம் தோல்வியடைந்ததது. அதன் பிறகு அந்த இளைஞரும் அவனது குடும்பமும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.

ஜாய் ஜமிமா மீண்டும் இரண்டாவது திட்டம் போட்டு மீண்டும் அமெரிக்காவில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட இளைஞரை மீண்டும் விசாகப்பட்டினம் வரவழைத்துள்ளார்.

நேராக விமான நிலையம் சென்ற ஜாய் ஜமிமா முரளிநகரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். பின்னர் போதை மருந்து கலந்த குளிர் பானங்களைக் கொடுத்து அந்த இளைஞரை போதையில் மயங்கிய பின்னர் அவன் மீது வாசனை திரவியம் தெளித்து, அவன் மயங்கிய நிலையில் இருக்கும் போது ஆடையில்லாமல் அவனுடன் நெருங்கிய படம் எடுத்துக் கொண்டாள்.

பின்னர் அவற்றைக் காட்டி அந்த இளைஞனை மிரட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டினார். இதனால் அந்த இளைஞர் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறினாலும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மிரட்டி பணிய வைத்தார்.

பின்னர் கடந்த மாதன் பீமிலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் செய்து அந்த இளைஞனிடம் ₹.5 லட்சம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். பின்னர் அந்த இளைஞரின் தொலைபேசியைத் பிளாக் செய்து அவர்கள் நிச்சயதார்த்தம் மற்றும் நெருக்கமான புகைப்படங்களைக் காண்பித்து மீண்டும் அந்த இளைஞரை அவளது வீட்டில் அடைத்து வைத்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இந்த புகைப்படங்களை வைத்து போலீசில் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த இளைஞர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் ஜாய் ஜமிமா வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றபோது ​​ தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜமிமா கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். ஜெமிமாவை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் அவரது நண்பர்கள் மூலம் மிரட்டியுள்ளனர்.

இறுதியாக இம்மாதம் 4ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளைஞர் ஜமிமாவிடம் இருந்து தப்பிச் சென்று பீமிலி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் ஜமிமாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து லேப்டாப், டேப், மூன்று போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று ஜமிமாவும் அவரது நண்பர்களும் பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் என்ற பெயரில் சிக்க வைத்து பெரும் பணம் பறித்தது தெரிய வந்தது.

ஜமிமாவின் நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் கூறுகையில் ஜமிமா பின்னனியில் பெரிய கும்பல் உள்ளது .

ஜமீமாவுக்கு இந்த கும்பல்தான் பயிற்சி அளித்து எப்படி இளைஞர்களை ஈர்ப்பது எப்படி ? யாரை சிக்க வேண்டும்? போத மருந்தை எவ்வாறு வழங்குவது? வீடியோ எடுத்து மிரட்டுவது எப்படி? இவை அனைத்தும் அவளுக்கு பயிற்சி வழங்கி உள்ளனர்.

அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று விசாகப்பட்டினம் காவல் ஆணையர் பாக்சி தெரிவித்தார்.

மேலும் ஒரு இளைஞர் இதேபோன்று ஜமிமா வளையில் விழுந்து பணத்தை இழந்ததாக தற்போது புகார் அளித்துள்ளார். எனவே ஜமிமா வளையில் சிக்கியவர்கள் போலீசில் புகார் அளிக்குபடி கேட்டு கொண்டார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 337

    0

    0