சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்; பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள்; முன் விரோதம் காரணமா?

Author: Sudha
27 July 2024, 2:07 pm

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோவிலில் ஊர்வலத்தின் போது அருண்குமார் என்பவர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
65 சதவீத காயங்களுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கு முன் விரோதம் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருண்குமார் தரங்கம்பாடி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது தற்போது தரங்கம்பாடி ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தற்போது வாடகை பாத்திரக்கடையும் ஜாதகம் பார்க்கும் கடையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளிதோறும் கடற்கரை அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயிலுக்கு சென்று அருண் குமார் சாமி தரிசனம் செய்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.

நேற்றும் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அருண்குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த சென்றதாக வாக்குமூலத்தில் அருண்குமார் தெரிவித்திருக்கிறார்.மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!