ஆணவக் கொலை வன்முறை அல்ல: அக்கறைதான்: கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர்….!!

Author: Sudha
10 August 2024, 11:38 am

தமிழ்த் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹூரோவாக நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். இப்படத்தை அவரே இயக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், அதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியது.

நேற்று திரையரங்குகளில் வெளியானது. நடிகர் ரஞ்சித் சேலம் மாவட்டம், கரூப்பூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இந்தப் படத்தை சாதி படம் என்கிறார்கள். அது பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது.நான் உச்ச நட்சத்திரம் கிடையாது. ஏழை, எளிய கலைஞன். நேர்மையாகவும் தகப்பனுடைய வலியை சொல்லவும் பெண்களில் எதிர்காலத்திற்காகவும் படம் எடுத்திருக்கிறேன்” என்றார்.

அப்போது அவரிடம் ஆணவப் படுகொலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது, “அது எமோஷன் தான். நம்முடைய பைக்கை ஒருத்தன் திருடிட்டு போனால், உடனே திருடனை கோபப்பட்டு அடிக்கிறோம்.

தன்னுடைய வாழ்க்கையே தனது பிள்ளைகள் தான் என வாழ்கிற ஒரு தகப்பன், பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிற மாதிரி ஒரு விஷயம் நடக்கும் போது ஏற்படுகிற பெற்றோரின் கோவம் மற்றும் அக்கறையினால் தான் இது நடக்கிறது. அது வன்முறை அல்ல…கலவரமும் அல்ல…. என்னை எதிர்ப்பவர்கள் இந்தப் படத்தை வந்து பாருங்கள்” என்றார்.

சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் ஆணவக்கொலை என்பது வன்முறை அல்ல அக்கறைதான் என ரஞ்சித் புது விளக்கம் கொடுத்துள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இதற்கு முன்பாக இவர் சுயமரியாதை திருமணம் மற்றும் ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற விஷயங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!