‘Miss u all’… விஜய் ஆண்டனியின் மகள் எழுதி கடிதம்… நெஞ்சை உருக்கும் வார்த்தைகளால் உடைந்து போன குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 8:49 pm

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று இரவு தூங்க சென்ற நிலையில் அவருடைய தந்தை அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை வீட்டு பணியாளர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக மன அழுத்தம் இருந்து வந்ததாகவும், அதற்காக அவர் சிசிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மகளின் தற்கொலை முடிவு விஜய் ஆண்டனியின் குடும்பத்தினரை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

இந்த நிலையில், தற்கொலைக்கு முன்பாக சிறுமி எழுதிய 10 வரிகள் கொண்ட கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில், ” love you all.. miss u all,” என தொடங்கி 10 வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், எனது நண்பர்களையும் ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன் என்றும், நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும் என்று நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 894

    0

    0