இலங்கை சென்ற மகள் திடீர் மரணம்… தகவலைக் கேட்டு அதிர்ந்து போன இசைஞானி இளையராஜா.. திரையுலகினர் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
25 January 2024, 9:43 pm

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவால் காலமானார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி பின்னணி பாடகியாக திரையுலகில் வலம் வந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இது குறித்து தகவல் அறிந்த இளையராஜாவின் குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் பாடி வந்த இவருக்கு, பாரதி படத்தில், “மயில்போல பொண்ணு ஒண்ணு,” என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ள பவதாரணி, நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படங்களுக்கு பவதாரணி இசையமைத்தும் இருக்கிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 547

    0

    0