அண்ணன் ஓபிஎஸ்க்கு என்னுடைய வருத்தம் : பிரச்சாரத்தின் முடியும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 9:07 pm

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணியோடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் ஈரோடு வில்லரசம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் குறித்து எந்த கேள்விகளையும் எழுப்ப வேண்டாம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”அண்ணன் ஓபிஎஸ் அவர்களுடைய தாயார் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ஓபிஎஸ்க்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 334

    0

    0