தமிழகத்தின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிரமான ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில், சிவ்தாஸ் மீனா அடுத்த தலைமை செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இறையன்புக்கு 6ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தில், என் பெயர் இறையன்பு. நான் 6-ம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார்.
தாங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற போவதாக என் பெற்றோர் மூலம் நான் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன். நான் வகுப்பில் நன்றாக படிப்பேன். என் அம்மாவின் மூலம் தங்களின் சில நகைச்சுவை கதைகளை கேட்டுள்ளேன்.
என் பெயர் இறையன்பு. நான் 6-ம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற போவதாக என் பெற்றோர் மூலம் நான் அறிந்து கொண்டேன்.
அய்யா நானும், எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. நடப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. பலர் வழுக்கிவிழும் நிலையும் ஏற்படுகிறது.
இவ்வாறு அந்த மாணவர் கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் மாணவர் இறையன்பு தன் பெயர் பொறிக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை நகலையும் இணைத்து அனுப்பி இருந்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.