டிரெண்டிங்

காவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி.. மெரினா, மாமல்லபுரத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் இருவர் போலீசாரிடம் இரவு நேரத்தில் தகராறு செய்தது மாமல்லபுரத்தில் காவலாளியை காரில் வந்தவர்கள் தாக்கியது என்ன ஒரே நாளில் நீங்கள் சென்னையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பட்டினப்பாக்கம் லூப் சாலையில், நேற்று (அக்.20) இரவு மயிலாப்பூர் போலீசார் வழக்கமான இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உள்ளே அமர்ந்திருந்ததை பார்த்துள்ளனர்.

அவர்கள் நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை வெளியில் வரச் சொல்லி உள்ளனர். பின்னர் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் போலீசாரை திட்டியும், வீடியோ எடுத்ததற்கு நன்றாக போஸ் கொடுத்த படியும் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோவில் உதயநிதியை இப்போது வரச் சொல்லட்டுமா என்ற வார்த்தையையும் அந்த நபர் பயன்படுத்தியிருந்தார். எனவே, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கணவன் – மனைவி அல்ல என்பது உறுதியானது. பின்னர், மேலும் விசாரிக்கையில், தகராறு செய்த நபர் சந்திரமோகன் என்பதும், அவருடன் இருந்தது அவரது தோழி தனலட்சுமி என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகிய இருவர் மீதும் பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக, மயிலாப்பூர் போலீசார் சிலம்பரசன் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், இருவர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மற்றொரு சம்பவமும் சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகி : வாழ்த்திச் சென்ற அரசியல் கட்சி தலைவர்கள்!

இது தொடர்பாக வெளியான வீடியோவின்படி, மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் ஏரியாவிற்குள் ஒரு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அங்கிருந்த காவலாளி இவ்வழியாகச் செல்ல முடியாது என கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதனை மதிக்காமல் உள்ளே சென்றதாகவும் தெரிகிறது. இதனால் அந்த காவலாளி அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள், அந்த காவலாளியை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், காரில் இருந்து மற்றொருவரும் இறங்கி அவரை அடிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சென்னையை ஒட்டிய பகுதிகளில் ஒரே நாளில் நிகழ்ந்த இரு சம்பவங்களால் பரபரப்பு உண்டாகி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

7 minutes ago

வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகள்… பொதுமக்கள் வரவேற்பு : ரூட் ரிதாம்ஸ் நிர்வாகிகள் பெருமிதம்!

கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…

27 minutes ago

பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?

இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…

2 hours ago

மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?

வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…

2 hours ago

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் திடீர் கைது… கண்ணீர் விட்டு அழுத காட்சி!

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…

3 hours ago

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் காரில் கடத்தல்.. கட்டாய திருமணம் செய்ய முயற்சி..இறுதியில் டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…

3 hours ago