சென்னையில் இருவேறு இடங்களில் செயின் பறிப்பு : மூதாட்டியை கீழே தள்ளி தங்கச்சங்கிலியை பறித்த மர்மநபர்கள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2022, 9:43 pm
சென்னை : அண்ணா நகரில் இருவேறு இடங்களில் பெண்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த விஜயலட்சுமி அண்ணா நகர் அருகே வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் வீட்டு வேலை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் இருவரில் பின்னால் அமர்ந்தவர் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.
பைக்கில் இருந்து இறங்கி விஜயலட்சுமியிடம் செயினை பறித்த போது அவர் தடுத்துள்ளார். ஆனால் அவரை கீழே தள்ளிய இளைஞர், வலுக்கட்டாயமாக அவரை தாக்கி செயின் பறித்து சென்றார்.
இது குறித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல அண்ணா நகரில் உள்ள மற்றொரு பகுதியில் இல்லத்தரசியான பிரபாவதி என்ற மூதாட்டி மளிகை கடைக்கு சென்று திரும்பிய போது மூதாட்யை தாக்கி 5 சவரன் நகை பைக்கில் வந்த நபர்கள் திருடி சென்றனர்.
Watch : Shocking video of a woman being attacked and being robbed of her gold chain in #Chennai on Thursday by a bike borne criminal @dt_next @chennaipolice_ #chainsnatching pic.twitter.com/1oH6awclYo
— Raghu VP / ரகு வி பி / രഘു വി പി (@Raghuvp99) April 1, 2022
இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து அண்ணா நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.