முந்திய நாம் தமிழர் கட்சி.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு : அரசியல் களத்தில் சீமான் கொடுத்த அதிரடி திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 5:51 pm

முந்திய நாம் தமிழர் கட்சி.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு : அரசியல் களத்தில் சீமான் கொடுத்த அதிரடி திருப்பம்!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்து வந்த நிலையில், தற்போது அதிமுக – பாஜக பிளவு காரணமாக மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், அதிமுகவின் புதிய கூட்டணி எப்படி இருக்கும், பாஜக தனி கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா? அல்லது மீண்டும் அதிமுகவுடன் கைகோர்க்குமா? என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இருப்பினும், தமிழகத்தில் 40க்கும் 40 தொகுதிகள் நாங்கள்தான் அபார வெற்றி பெறுவோம் என திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கூறி வருகின்றனர். இந்த நிலையில், தென்சென்னை தொகுதி வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் மீதமுள்ள 39 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. எப்போதும் போல், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…