நாமக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் தில்லை குமார். பட்டாசு விற்பனை செய்ய அனுமதி பெற்ற இவர், மோகன் அருகே குமரிபாளையத்தில் குடோன் வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்யும் வகையில், அதிகளவு பட்டாசை நேற்று வீட்டில் எடுத்து வந்து வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் விபத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறியதில், வீட்டில் இருந்த சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வெடித்தது. இதில், தில்லை குமார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டம் ஆனது.
மேலும் அருகில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து சேதம் அடைந்தன. விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார் தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்த நிலையில், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த பெரியக்காள் என்பவரும் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 11 பேர் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல், கரூர் மோகனூர் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. சம்பவம் அதிகாலை நடைபெற்றது என்பதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தீயணைக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு யாராவது சிக்கி உள்ளார்களா? சேதம் குறித்து வருவாய், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பட்டாசு குடோனுக்கு வேறு இடத்தில் அனுமதி பெற்று வீட்டில் பட்டாசுகளை அதிகளவு பதுக்கி வைத்திருந்ததில் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
This website uses cookies.