மத்திய அரசு திட்டங்களுக்கு பெயர் மாற்றம்.. கோவைக்கு இந்த முறையும் ஏமாற்றம் : பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் தடாலடி!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 5:02 pm

மத்திய அரசு திட்டங்களுக்கு பெயர் மாற்றம்.. கோவைக்கு இந்த முறையும் ஏமாற்றம் : பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் தடாலடி!

தமிழக படஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி விமர்சித்து வருகின்னறனர். அந்த வகையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

சட்டசபைக்கு வெளியே போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தடையின்றி படித்தாரே தவிர, சொல்லிக் கொள்ளும் வகையில் அறிக்கையில் எதுவும் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் ஆவாச யோஜனா திட்டம், தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது அடையாறு கால்வாயை தூர்வாரும் பணி, கலைஞர் கருணாநிதியின் காலத்தில் இருந்து பேசப்பட்டு வருகிறது. தற்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மேலும், கோவையில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் டைடல் பார்க்கை, ஏதோ புதிதாக பேசுவது போல் மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கு வேறு பெயரை வைக்கும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் அவர் புகார் கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ