நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு ‘விவேக்’ பெயர்: அரசாணை வெளியீடு…மே 3ம் தேதி பெயர்ப்பலகை திறப்பு..!!
Author: Rajesh1 May 2022, 11:20 am
சென்னை: நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,000 குடும்பங்களுக்கு ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று ரமலான் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு வழங்கினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பேசிய அவர்,
1 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்ட மறைந்த நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். அப்படியொரு நடிகரான விவேக் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டார். வரும் மே மாதம் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
0
0