‘நீ என்ன குரங்குக்கு பிறந்தவனா..?’ அமலாக்கத்துறை அதிகாரிகள் குறித்து நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு..!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 8:27 am

கரூரில் விடியா ஆட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமலாக்க துறையை அதிகாரிகளை மதில் மேல் ஏறும் குரங்கு போல சுவர் ஏறி குதிக்கும் அமலாக்கத்துறை என நாஞ்சில் சம்பத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் 80 அடி சாலையில் நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .

இதில் அமலாக்கத்துறையை விமர்சித்த நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது, உச்சநீதிமன்றம் இரண்டு மாதத்திற்குள் செந்தில் பாலாஜி உடைய வழக்கை இரண்டு மாதத்தில் விசாரித்து அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையில், அதிகாலை 4.30 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்து அமலாக்கத்துறை நுழைந்துள்ளது. நந்தவனத்தில் நாய் நுழைவது போலவும், கரும்பு காட்டிற்குள் காட்டெருமை நுழைவது போன்றும், சுவர் ஏறிச் செல்ல வேண்டிய அவசியம் என்ன..? என மத்திய அரசு அமலாக்கத்துறை அதிகாரிகளை அருவருக்கத்தக்க வார்த்தைகளை பொது மேடையில் பேசினார்.

மேலும் மதில் மேல் ஏறி குதித்த அதிகாரிகளை குரங்குக்கு பிறந்தவனா..? என அவர் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!