எனது நண்பர் டிரம்ப் மீதான தாக்குதல்; வன்மையாகக் கண்டிக்கிறேன்; பிரதமர் நரேந்திர மோடி,..

Author: Sudha
14 July 2024, 10:13 am

அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது அதிபர், துணை அதிபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவின் பல்வேறு
மாகாணங்களில் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று ட்ரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தற்போது டொனால்ட் டிரம்ப் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது தொடர்பாக டிரம்ப் தரப்பு செய்தி தொடர்பாளர் குறிப்பிடும் போது இந்த கொடூர சம்பவத்தை அடுத்து விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் பாதுகாப்பு பணி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது நன்றி இந்த சூழலில் மேலும் ஒரு நபருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த சம்பவத்திற்கு தமது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை, ஆனால் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள், சுட்டுக் கொல்லப்பட்டவரிடம் இருந்து AR-15 வகை தானியங்கி துப்பாக்கியை மீட்டதாக தெரிவித்தனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளர். X வலைதள பதிவில் எனது நண்பரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 190

    0

    0