அரசியலில் போலி ஓபிஎஸ் தான்… அதிமுகவில் எந்த மாற்றமும் இல்லை ; நத்தம் விஸ்வநாதன் காட்டம்!!

Author: Babu Lakshmanan
27 December 2022, 2:11 pm

சென்னை : பொருட்களில் போலி இருப்பதை போல, அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம் தான் என அதிமுக மூத்த நிர்வாகி நத்தம் விஸ்வநாதன் காட்டமாக பேசியுள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ளஅதிமுக தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளது தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தொடரலாமா? வேண்டாமா? மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டிகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன்;- பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அரசியலில் போலி ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும், என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

  • Adult Comedy Movie Perusu First Day Collection பெருசு படத்திற்கு இவ்வளவு மவுசா? முதல் நாளே பட்டையை கிளப்பிய வசூல்!