வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் என்ன நடக்குது?தேசிய பசுமை தீர்ப்பாயம் போட்ட உத்தரவு…!!

Author: Sudha
2 August 2024, 5:04 pm

கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.பலர் காயமடைந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்தை கையில் எடுத்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!