என்னது தேசிய அரசியலா? CM ஸ்டாலின் கும்மிடிபூண்டியை தாண்டியிருக்காறா? அண்ணாமலை அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 6:21 pm

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருவதாகவும், உள்கட்டமைப்பினை வைத்து அரசியல் இங்கு பேசப்படவில்லை ஜாதியை வைத்து தான் அரசியல் செய்யப்படுவதாகவும் மூன்று மாநில தேர்தலில் நிரந்தரமாக அரசியல் இல்லாத இடத்தில் பாஜகவை உடைத்துள்ளதாக தெரிவித்தார்.

திரிபுராவில் 2 சதவிகிதமாக பாஜக இருந்தது கட்சி வளர்ச்சியடைந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளதாகவும், தனிப்பெரும்பான்மையாக திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும், நாகலாந்தில் இரண்டு பங்கு பாஜகவிற்கு இடம் கிடைத்துள்ளதாகவும், மேகலாயவாவில் பாஜக கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி ஆட்சி செய்வதை அஷ்டலட்சுமி என்று கூறுவதாகவும் வடகிழக்கு முழுவதும் பாஜக கட்சி அல்லது பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெறுவதாக கூறினார்.

ஈரோடு தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பினை கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், ஈரோடு தேர்தலில் மக்கள் தீர்ப்பினை ஏற்பதாகவும் 2024 -ல் தேர்தல் பாஜகவிற்கானதாக இருக்கும் என்றும் ஈரோடு தேர்தல் முடிவை முடிவை தலைவணங்கி ஏற்பதாக தெரிவித்தார்.

இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை சார்ந்து தான் ரிசல்ட் இருந்து இருக்கிறது அதற்காக திமுக ஸ்டாலினின் 24 மாத காலம் இருந்ததற்காக மக்கள் வாக்களித்தார்கள் என்று ஏற்று கொள்ள மாட்டோம் எனவும் 2024 வரை இடைத்தேர்தல் நடக்க கூடாது என வேண்டி கொள்ளவதாக அண்னாமலை கூறினார்.

திமுகவிலிருந்து வெளிவர திருமாவளவன் புதிய யுக்தியை கையாள்வதாகவும் திமுக கூட்டணியிலிருந்து வெளி வரவேண்டுமென்றால் தைரியமாக வரலாம் சாக்கு போக்கு ஏன் திருமாவளவன் கூறுகிறார் என்று தெரியவில்லை.

பாஜக கட்சி, அண்ணாமலையை மட்டுமே பேசுவதற்கு திருமாளவன் கூட்டம் போடுவதாகவும், காஷ்மீரில் மட்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1200 தீவிரவாதிகள் சுடப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கேஸ் இல்லை என்பது கேஸ் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதுள்ளதாகவும் மோடி தலைமையிலான அரசு சொல்லாமைல் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளதாகவும் மாநில அரசுகள் வாக்குறுதி கொடுத்தும் குறைக்கவில்லை என கூறினார்.

கேஸ் பெட்ரோல், டீசால் போன்றவைகள் ரஷ்யாவில் இருந்து வாங்கப்படுவதால் தான் விலையேற்றம் ஏற்படுவதாகவும், கூட்டணி நட்பு என்பது ஒரு சித்தாந்தத்தோடு இருப்பதால் பாஜக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரித்து வாக்கு சேகரித்ததாகவும்,தங்களின் கூட்டணி பலமாக தான் உள்ளதாகவும் கருத்தியல் குறித்து விவாதிக்க தயாரா என கேட்கும் திருமாவளவன் தடா பெரியசாமி கிட்ட கருத்தியல் தொடர்பாக விவாதிக்க தயாரா எனவும் ஜாதிய அமைப்புகளை கொண்ட கட்சியாக விசிக உள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் நடக்கும் பாதி கலவரங்களுக்கு திருமாவளவன் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார். ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இணைவது என்பது அவர்களது கட்சி சார்ந்த முடிவு அதில் நாங்கள் தலையிட முடியாது எனவும் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு அமைச்சர்கள் சிறையில் உள்ளதால் தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று கூறினார்.

தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் ஸ்டாலின் கும்முடி பூண்டியை தாண்டாமல் எப்படி தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் பரூக் அப்துல்லா தேஜஷி யாதவ் போன்றவர்கள் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வருவது தேசிய அரசியல் இல்லை எனவும் பல்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு தேசிய அரசியல் பற்றி பேசுவது தான் தேசிய அரசியல் என தெரிவித்தார்.


விலைபோகாத கத்திரிக்காயை கொண்டு வந்து தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாகவும் கர்நாடாகவில் திமுக போட்டியிட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு வந்துவிட்டு அதன் பிறகு ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டுவதாக கூறினால் ஏற்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…