நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்த உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி : செல்லூர் ராஜூ விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 12:04 pm

மதுரை மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கழகத்தின் சார்பில், மதுரை காமராஜர் சாலையில் அய்யங்கார் தெரு பகுதியில் நடைபெற்று வரும் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.

பொதுமக்களிடம் பேசுகையில், மறைந்த தலைவர்களை பற்றி இலைமறை காய்மறையாக பேசலாம்., ஆனால், பட்டவட்டமாக பேசுவது தவறு.! அவர் உண்மையை சொன்னாலும் அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா.! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த திமுகவுக்கு பொருந்துதோ இல்லையோ, அதிமுகவிற்கு பொருந்தும்.

அண்ணாவின் கட்சியை, கொடியை, சின்னத்தை இன்றைக்கு உலகறிய செய்தவர் எம்.ஜி.ஆர்., MGR தான் நடித்த படத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை காட்டியவர். அப்பேற்பட்டவரை கருணாநிதி 1972ல் அண்ணா மறைந்த பிறகு எம்.ஜி.ஆர்ரை கட்சியை விட்டு தூக்கி எரிகிறார்.

திமுக இருக்கும் வரை அண்ணாவின் பெயரை மறைத்து விடும் என்பதால், எம்ஜிஆர் இந்த காட்சியை அண்ணாதிமுக என பெயர் வைத்தார்.

எம்ஜிஆர் நடித்த படம் வெள்ளி விழா காணும் அவர் தொடங்கிய கட்சி 10 நாளில் காணாமல் போகும் என கூறியவர் கலைஞர். ஆனால், அவரை 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியவர் புரட்சிதலைவர் எம்ஜிஆர்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என கூறியவர் அண்ணா. சண்டாளன் கருணாநிதி என குறுப்பிட்ட செல்லூர் ராஜு. தமிழ்நாட்டில் உணவுக்கு அரசிக்கு பஞ்சம் ஏற்பட்ட போது ஒரே கையெழுத்து போட்டு 22 ஆயிரம் ரேஷன் கடையை அமைத்து ஒரு கிராமத்திற்கு ஒரு ரேஷன் கடை என கொண்டு வந்தவர் எம்ஜிஆர்.

சண்டாள பையன் கருணாநிதி ஆட்சியில் நல்ல சாப்பாடு சாப்பிட முடியவில்லை என பெண்கள் கூறியதை தொடர்ந்து பெண்களுக்கு தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவந்தனர் ஜெயலலிதா.

திமுகவில் இன்றைக்கு வாரிசு அரசியல் தான் உள்ளது.? எடப்பாடிக்கு அப்படியா இருந்தது.? எந்த கூட்டணி இல்லாமல் 2011-ல் இருந்து 2016-ல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஒரு நிர்வாகத்தை நடத்த மாஸ் தேவை இல்லை நிர்வாகத் திறமை இருந்தால் போதும், ஒரு நிர்வாகத்தை நடத்த அறிவு, ஆற்றல், மக்களுக்கான திட்டம் ஆகியவற்றை இருந்தால் போதும். வரும் 2026ல் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி தான் அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது இருக்காது என ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 40 மாதங்களுக்கு மேலாகி விட்டது.

இன்றைக்கு விலைவாசி உயர்வு, மின் கட்டணம் 3 முறை உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, இவையெல்லாம் செய்து விட்டு தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

பிறந்த கலைஞர் மகனாக பிறக்க வேண்டும், அதே போல அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் நடிகைகளுடன் ஆடி பாடி இன்றைக்கு MLA, அமைச்சர் யாருக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும், எங்களுக்கும் ஆசையா இருக்கும்லா.

இருப்பதிலே வாக்கு கம்மியாக உள்ள சேப்பாக்கம் (துறைமுக மாற்றி கூறினார்) தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார். சட்ட மன்றத்தில் அவருக்கு முன் சீட்டு. ஆனால், எனக்கும் ராஜன் செல்லப்பாவுக்கும் கடைசி சீட்டு. நான் என்ன தவறு செய்தேன் என கேட்டு மீண்டும் சட்டமன்றத்தில் வெற்றிபெற்று வந்தவர் எம்.ஜி.ஆர்.

மேலும் படிக்க: செல்வப்பெருந்தகை பதவி பறிக்கப்படுமா? ஆம்ஸ்டிராங் கொலையில் தொடர்பு? ராகுலுக்கு போன பரபரப்பு கடிதம்.!

கொரோனா காலத்தில் அரசு கஜானா காலி, டாஸ்மாக் கடைகள் மூடிய பிறகு மக்களுக்காக 1000 ரூபாய் கொடுத்தவர், அதன் பிறகு 2500 கொடுத்தவர் எடப்பாடியார். அதை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்தது இந்த மட்டுரைக்காரன் செல்லூர் ராஜு டா.

தமிழகத்தில் இன்றைக்கு விதம் விதமான போதை பொருட்கள் கிடைக்கிறது. அதனை விற்பனை செய்வது முதல்வருக்கு நெருக்கமானவர்கள் தான் இன்றைக்கு இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டனர். இன்றைக்கு தமிழ்நாடே போதைக்கு அடிமையாகிவிட்டது. தமிழ்நாட்டில் VAO முதல் அரசு அதிகாரிகள், காவல்துறை, கலெக்டர் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு துணைமுதல்வர் பதவி செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!