2016ல் திருமணம்? விதியை மீறினார்களா நயன்தாரா – விக்கி தம்பதி? 4 பேர் கொண்ட குழு விசாரணை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 3:09 pm

புதிதாக மருத்துவ கிடங்கு இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கிடங்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்.21 முதல் அக்.6 வரை நடைபெற்ற நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்ப முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நயன்தாரா விவகாரத்தில் 4பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை நிறைவில் விதிமீறல் உள்ளதா என்பது தெரியவரும். புதிதாக மருத்துவ கிடங்கு இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கிடங்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் மருத்துவ கிடங்குகளை மூடும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததை பேசுகிறார்.10 ஆண்டுகள் செய்ய முடியாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?