வெள்ளி வென்ற தங்கமகன்: நூலிழையில் தவற விட்ட தங்கம்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா…!!

Author: Sudha
9 August 2024, 8:39 am

பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 33 வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இம்முறை நான்கு வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறது. ஆனால் நடப்பு தொடரில் ஒரு தங்கப் பதக்கத்தை கூட இந்தியா வாங்கவில்லை. இதனால் இந்தியாவின் கனவை நீரஜ் சோப்ரா தான் காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு வீரருக்கும் ஆறு முயற்சிகள் வழங்கப்பட்டன. அதன் படி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் அவருக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டது. நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.

1992 ஒலிம்பிக்கிற்கு பிறகு பாகிஸ்தான் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.தங்கம் வென்றது பாகிஸ்தான் வீரராக இருந்தாலும் இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!