நீட் விலக்கு தீர்மானம் நிராகரிப்பு விவகாரம்.. இன்று அனைத்து கட்சிக் கூட்டம் : பாஜகவைத் தொடர்ந்து அதிமுகவும் புறக்கணிப்பு

Author: Babu Lakshmanan
5 February 2022, 10:10 am

சென்னை : நீட் விலக்கு தீர்மானம் நிரகாரித்த விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கப் பேவாதில்லை என்று அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 4 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் இந்த தீர்மானத்தை மீண்டும் சட்டப்பேரவை குழுவினருக்கே திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் இந்த செயல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை பலவீனமடையச் செய்தது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அதிமுக, பாஜக, தேமுதிக, விசிக உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாஜக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று நேற்றைய தினமே அறிவித்து விட்டது.

இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக நீட் விலக்கிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!