நீட் தேர்வால் பறிபோன இருஉயிர்கள்… மகன் தற்கொலை… துக்கம் தாளாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு ; சென்னையில் பகீர் சம்பவம்!

Author: Babu Lakshmanan
14 August 2023, 9:57 am

நீட் தேர்வில் தோல்வியடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். புகைப்பட கலைஞரான இவருக்கு ஜெகதீஸ்வரன் (19) என்ற மகன் இருந்தார். சிபிஎஸ்இ-யில் பிளஸ் 2 படித்த இவர், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்ட ஜெகதீஸ்வரன், 2 வருடமாக நீட் தேர்வை எழுதி வந்தார். ஆனால், 2 முறையும் தேர்ச்சியடையவில்லை.

இருப்பினும் 3வது முறையாக நீட் தேர்வை எழுதி, அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படிப்பேன் என்று தனது தந்தையிடம் நம்பிக்கையாக கூறி வந்துள்ளார். இதற்காக நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டார். தன்னுடன் நீட் பயிற்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைக்காததால் என்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். அதோடு, சிலர் அதிக பணம் கட்டி நிர்வாக சீட்டை வாங்கி மருத்துவ படிப்பில் சேர்த்து விட்டனர்.

இதனால், மனகுழப்பத்தில் இருந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 515

    0

    0