நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரம்.. ஒரே போடாக போட்ட ஆளுநர்… திகைத்துப் போன தமிழக அரசு..!!
Author: Babu Lakshmanan12 August 2023, 1:25 pm
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய மசோதா குறித்து ஆளுநர் ஆர்என் ரவியின் முடிவால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி சந்தித்த ‘எண்ணித் துணிக’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
அப்போது, மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்வு விலக்கு குறித்து ஆளுநர் ஆர்என் ரவியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்என் ரவி, பயிற்சி மையம் இருந்தால் தான் நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றிபெற முடியும் என்ற போலி பிம்பத்தை உண்டாக்கியுள்ளதாகவும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும் என்றும், நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.