‘நீட் பாட்டுக்கு நடந்திட்டிருக்கு… செஸ் பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருப்பதா..?’ என்ன மாடலோ.. திமுகவை விமர்சித்த பிரபல நடிகை..!!
Author: Babu Lakshmanan18 July 2022, 2:32 pm
நீட் தேர்வை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றாத திமுக அரசை பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
2022-23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தேர்வை எழுத நாடு முழுவதும் விண்ணப்பித்து இருந்த 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேரில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவர்கள் தேர்வை எழுதி இருக்கின்றனர். அகில இந்திய அளவில் ஒட்டு மொத்தமாக 95 சதவீதம் பேரும், தமிழகத்தில் 91 சதவீத தேர்வர்களும் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக நீட் தேர்வு ரத்து உள்ளது. ஆட்சி அமைந்த உடன் முதல் நடவடிக்கை நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று திமுக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வீதி வீதியாக மேடை போட்டு பரப்புரை செய்தனர்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2வது முறையாக நீட் தேர்வு நடைபெறுகிறது. இது எதிர்கட்சியினரிடம் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் விமர்சனங்களை எழச் செய்தது. நிறைவேற்றாத வாக்குறுதிகளை எதற்காக கொடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்ப்டடு வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சர் ஸ்டாலின் நடித்திருந்தது வரவேற்பை பெற்றிருந்தாலும், பெரும் விமர்சனங்களையும் சம்பாரித்துள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்கு 10 நாட்களுக்குள் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வு குறித்து கவலைப்படாமல், விளம்பரப்படங்களில் நடித்து விளம்பரத் தேடிக் கொள்வதா..? என்று எல்லாம் எதிர்கட்சியினர் வசைப்பாடத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி தமிழக அரசை விமர்சித்து டுவிட் போட்டுள்ளார். அதில், “நீட் வராது வரவுடமாட்டோம்னு சொல்லி சொல்லியே அன்னிக்கு அனிதாவுடைய உயிரை வாங்கியவங்க,அதே வாக்குறுதியை சொல்லி வோட்டு வாங்கினவங்க, இப்போ neet பாட்டுக்கு நடந்துக்கிட்டு தான் இருக்கு, இவங்க பாட்டுக்கு செஸ் பாட்டுக்கு ஆடிக்கிட்டு அடுத்த மரணத்துல அரசியல் பண்ண போயாச்சு. என்ன மாடலோ,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை அரசியல் கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலனோர், கஸ்தூரி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது..? என்று எல்லாம் ஆதரவாக கருத்து போட்டு வருகின்றனர்.
0
0