2019 நீட் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி வழக்கை சரியாக கையாளவில்லை; மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டம்

Author: Sudha
16 July 2024, 6:01 pm

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பலர் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.தேனி, அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சென்னை மாணவர் உதீப் சூர்யா என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்ற போது இந்த ஆள் மாறாட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. கல்கத்தா,ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவங்கள் நடைபெற்றது

இதைப் போன்ற சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஊடகங்கள் சரியான தகவலை வழங்குவதில்லை எனவும் கன்னா பின்னாவென்று தகவல்களை வெளியிடுகின்றன எனவும் தெரிவித்தார்.அதற்கு பதில் அளித்த நீதிபதி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிடுகிறது என்றார்.மாணவர்களின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள் போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியை முன் வைத்தார்

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி முறையாக கையாளவில்லை எனவே விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்றங்கள் என அறிவுறுத்தினார்.மேலும் சிபிசிஐடி கேட்கும் வழக்கு குறித்த ஆவணங்களை தேசிய தேர்வு முகமை 19ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்தார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?