கழுத்தில் இறுக்கப்பட்ட கம்பி… ஜெயக்குமார் தனசிங் திட்டமிட்டே கொலை… பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்..!

Author: Babu Lakshmanan
7 May 2024, 8:04 pm

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான வழக்கில் புதுபுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது. ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும். இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கணவனை கட்டிப் போட்டு சிகரெட்டால் சூடு வைத்த மனைவி : பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

இந்த நிலையில், ஜெயக்குமாரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல் வைத்து கட்டப்பட்டிருந்ததாகவும், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டுள்ளது மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது.

எனவே, ஜெயக்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை என்று போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர். ஜெயக்குமார் கொலை வழக்கில் நாளுக்கு நாள் புது புது தகவல்கள் வெளியாகி வருவதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 546

    0

    0