நெல்லையில் அதிபயங்கரம் : பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Author: Babu Lakshmanan
16 March 2022, 12:37 pm

நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த களக்காடு அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல்லில் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக கைது செய்த திண்டுக்கல் தணிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

ரவுடி நீராவி முருகனை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vishal Ready for Marriage Ceremony பத்திரிகையோடு நடிகர் விஷால்… விரைவில் திருமணம் : நல்ல நேரம் ஸ்டார்ட்..!!