நெல்சன் மனைவி கொடுத்த ₹75 லட்சம்.. விசாரணையில் பகீர் : ரூட்டு மாறும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 4:58 pm

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக, அதிமுக,பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சியின் நிர்வாகிகள் என மொத்தமாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படைக்கு பணம் கொடுக்க பல ரவுடிகள் மற்றும் முன் விரோதம் காரணமாக பலரும் பணம் கொடுத்தது தெரியவந்தது. குறிப்பாக இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் இதனை சம்போ செந்தில் செய்து முடித்தாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சம்போ செந்திலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமைறவாகவே இருந்துள்ளார். பல இடங்களில் தேடியும் இன்னும் சிக்கவில்லை. இந்தநிலையில் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் காரிலையே மதுரை சென்ற மொட்டை கிருஷ்ணா அங்கு விமான நிலையத்தில் இறங்கிவிட்டு தனது காரை சிவா என்ற நபரிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளார். காரோடு சென்னை வந்த சிவாவை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மொட்டை கிருஷ்ணா மதுரையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மொட்டை கிருஷ்ணா தொலைபேசியில் யாரோடு பேசினார் என போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா பலமுறை பேசியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணா வெளிநாடு தப்பி செல்ல மோனிஷா உதவி செய்தாரா என போலீசார் விசாரணையில் இறங்கினார். அப்போது மோனிஷா போலீசாரிடம் கூறுகையில், கிருஷ்ணா தனது பள்ளி கால தோழர் என தெரிவித்துள்ளார்.

வழக்கு ஒன்று தொடர்பாக கிருஷ்ணாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கிருஷ்ணாவிற்கு தொடர்பு இருப்பது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மோனிஷாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும், வெளியூர் செல்லக்கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நெல்சனின் மனைவி மோனிஷா வங்கிக் கணக்கில் இருந்து ₹75 லட்சம் ரொக்கம் மொட்டை கிருஷ்ணன் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்தை எதற்காக மோனிஷா அனுப்பியுள்ளார்? இந்த பணத்தை வைத்துதான் வெளிநாடு தப்பி சென்றாரா கிருஷ்ணன்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 298

    0

    0