இனி இந்த வங்கியில் புதிய வாடிக்கையாளர்கள் சேர முடியாது : RBI எடுத்த அதிரடி ACTION!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 6:37 pm

இனி இந்த வங்கியில் புதிய வாடிக்கையாளர்கள் சேர முடியாது : RBI எடுத்த அதிரடி ACTION!

இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக் மகிந்திரா வங்கி நாடு முழுவதும் பல்வேறு கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக கோடாக் மஹிந்திரா வங்கி தான் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு என்ற நடைமுறையை அறிமுகம் செய்தது. ஆன்லைன் மூலம் கணக்கு தொடங்குதல், கேஒய்சி பயன்பாடு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வாயிலாக பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த சூழலில் கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோடாக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மற்றும் செல்போன் செயலில் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், ஆன்லைன் மூலம் புதிதாக கிரீடிட் கார்டுகள் வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது : அதிமுகவினர் கொந்தளிப்பு.. மதுரையில் பரபரப்பு!

கடந்த 2022, 2023ம் ஆண்டுகளில் ஆன்லைன் வங்கி சேவைக்கான ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியதற்காக கோடாக் மஹிந்திரா வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோடாக் மஹிந்திரா வங்கியில் பிற சேவைகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!