நள்ளிரவில் நிகழ்ந்த மாற்றம்; நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள்; குடியரசுத் தலைவர் உத்தரவு

Author: Sudha
28 July 2024, 8:56 am

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று நள்ளிரவு பிறப்பித்த உத்தரவில், பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.சில மாநிலங்களின் ஆளுநர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்ததால் அங்கு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டனர்.

தெலுங்கானா புதுச்சேரி ஜார்கண்ட் மாநில ஆளுநர் பொறுப்புகளை கவனித்து வந்த சி பி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக விஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓம்பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிஷன்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தோஷ் குமார் கங்குவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்

சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சி எச் விஜயசங்கர் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்

பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அசாம் ஆளுநராக இருந்த லக்ஷ்மன் ஆச்சார்யாவிற்கு மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே. கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான கைலாசநாதன் ஓய்வுக்குப் பிறகும் 11 ஆண்டுகள் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் சுமார் 18 ஆண்டுகள் பணியாற்றியவர் கே.கைலாசநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1110

    0

    0