நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் குஷ்பு. தற்போது பாஜகவில் செயல்பட்டு வரும் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் மிகவும் இழிவாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதையடுத்து நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்து கண்கலங்கினார். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சித்த குஷ்பு அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கும் என கூறினார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
மேலும் அவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திமுக, காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் குஷ்புவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்தன. இதனால் குஷ்பு வலைதளங்களில் டிரெண்ட் ஆனார்.
முன்னதாக குஷ்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் தனது கணவரும் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யின் படங்களை பதிவிட்டு, ‛‛நான் 28 ஆண்டுகளுக்கு முன் காதலில் விழுந்த முகம். என் இதயத்தை இன்னும் படபடக்க வைக்கிறார் இந்த மனிதர்” எனக்குறிப்பிட்டு அன்பின் வெளிப்பாடாக ஹார்ட்டின் எமோஜியை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவுக்கு கீழே ஜெயசங்கர் கெனாத் என்பவர், ‛‛இந்த மனிதரின் பணத்தை பாதுகாக்க நீங்கள் பாஜகவுக்கு சென்றீர்கள்” என குறிப்பிட்டு இருந்தார். இதனால் கோபமடைந்த குஷ்பு,‛‛நீங்கள் வேண்டுமானால் உங்கள் தொழிலை பாதுகாப்பதற்காக உங்கள் வீட்டின் பெண்களை பயன்படுத்துபவராக இருக்கலாம். வெட்கம்கெட்டவர்கள்” என்பதோடு மட்டுமின்றி இன்னும் சில வார்த்தைகளை காட்டமாக பதிவிட்டு இருந்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்புவை விமர்சனம் செய்ததால் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை குஷ்புவின் இந்த பதிலடியும் டிரெண்ட் ஆனது. குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து கொண்டு இன்னொருவரின் குடும்பத்தின் பெண்களை இழுத்து விமர்சனம் செய்தது நியாயமா? என நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் தான் நடிகை குஷ்பு மீது திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ராஜூ என்பவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய மகளிர் ஆணைய தலைவி குஷ்பு ட்விட்டரில் ஜெயசங்கர் என்பவருக்கு பதில் ஒன்றை அளித்து இருந்தார். அதில் ‛செருப்பால் அடி, உங்கள் தொழிலை காப்பாற்றுவதற்காக வீட்டு பெண்களை பயன்படுத்துபவராக நீங்கள் இருக்கலாம்.
வெட்கமற்ற மனிதர்கள்’ என இழிவாக விமர்சனம் செய்துள்ளார். இதனை பார்த்து என் வீட்டு பெண்கள் தாங்க முடிாத மனவேதனையும், அவமானமும் அடைந்துள்ளனர். எனவே குஷ்பு மீது சமூக வலைதளத்தில் பெண்களை இழிவாக பேசியது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.