மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிய விதி… பயனாளிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய அறிவிப்பு : திமுக அரசு மீது அதிருப்தி!!

மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிய விதி… பயனாளிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய அறிவிப்பு : திமுக அரசு மீது அதிருப்தி!!

திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1,06,48,406 மகளிர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க முறையிட செய்யவும் காலக்கெடு விதித்திருந்தது. இதன் படி இந்த மாதம் கூடுதலாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல உரிமைத்தொகை பெற்றுக் கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்கள் தொடர்பாக மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரீசீலனை செய்யப்பட்டு பயணாளிகள் தகுதி உறுதிப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, வருமான வரி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தகவல் அதன் அடிப்படையில் மாதந்தோறும் (Monthly) சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இறப்புப் பதிவு (Death Registration), ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தரவுகள் (IFHRMS) மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்களின் பணியாளர்கள் பற்றிய தரவுகள். சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத் தரவுகள் (SSS) , அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரிய தரவுகள் வருமானச் சான்று தரவுகள், நான்கு சக்கர / கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட தரவுகள் ஆய்வு செய்யப்படும்.

காலாண்டு (Quarterly) முறையில் சரிபார்க்க வேண்டிய தரவுகள் i. பொது விநியோக திட்டம் தொடர்பான தரவுகள் (PDS) சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள் (GST) .

நில உடமை தொடர்பான தகவல் தளங்கள் (Tamil Nilam, Registration Data base, GRAINS Portal) அரையாண்டு (Half Yearly) முறையில் சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள் தொழில் வரி செலுத்தப்பட்ட தரவுகள் Professional Tax) ii. மின்சாரப் பயன்பாட்டு தரவுகள் (TANGEDCO) ஆண்டு தோறும் (Annually) சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள் வருமான வரி செலுத்தப்பட்ட / தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் (Income Tax)

சொத்து வரி குறித்த தரவுகள் (Property Tax) தகவல்கள் அடங்கிய தரவுகளை பராமரிக்கும் அரசுத் துறைகள் தொழில்நுட்ப தொடர்பு வழியாக நிகழ் நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளைக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட இணையதளத்திற்கு பகிர்ந்தளிக்க ஆணையிடப்படுகிறது.

இத்தகவல்கள் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் தானாகப் புதுப்பிக்க வேண்டும் (Auto Renewal), தானாகப் புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலினை இணையதளம் வழியாக பிரதி மாதம் 2ம் தேதிக்குள் சமூகப் பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

1 hour ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

1 hour ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

2 hours ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

2 hours ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

2 hours ago

This website uses cookies.