திமுகவின் பித்தலாட்டத்தை வெளியே கொண்டு வர புதிய யுக்தி.. யாத்திரையில் அண்ணாமலை அறிவிப்பு!!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரை நடைப்பயணம் விக்கிரவாண்டியில் சுங்கச்சாவடியில் இருந்து தொடங்கி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறைவு செய்தார்.
பின்னர் இந்த யாத்திரை நடைப்பயணம் நிறைவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 9 ஆண்டுகளில் 4800 கோடி கொடுத்துள்ளனர்
அதேபோல் 9 ஆண்டுகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 76 லட்சத்து 904 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் குடி தண்ணீருக்கு மட்டுமே மத்திய அரசு திட்டத்தின் மூலம் 100 சதவீதம் முழுமையான தொகையை மத்திய அரசு வழங்கி உள்ளது.
ஆனால் இந்த திமுக எதுவுமே வழங்கவில்லை எனவும் பொய் சொல்லி வருகின்றன மேலும் விவசாயிகள் பயன்படும் வகையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை 9 ஆண்டுகளில் 5 கோடியே 28 லட்சத்தி 599 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
அவர்கள் வங்கிக் கணக்கில் எது அனுப்பப்பட்டுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே என்று தெரிவித்தார். மேலும் இதுவரை 5104 கோடி வங்கி கடன் மட்டும் வழங்கப்பட்டுள்ளது மத்திய அரசு திட்டங்கள் மூலம் ஆனால் திமுகவினர் எந்த திட்டமும் செய்யாமல் அனைத்து இடங்களில் மஞ்சப்பை முதல் மு க ஸ்டாலின் படமும் மு கருணாநிதி அவர்கள் படமும் அனைத்து இடங்களிலும் வைத்துள்ளனர்.
இன்னும் ஒரே இடத்தில் மட்டுமே இவர்கள் படம் வைக்கவில்லை அது என்னவென்றால் டாஸ்மாக் கடையில் மட்டும் தான். மேலும் இளைஞர் வளர்ச்சிக்கும் பெண்கள் வளர்ச்சிக்கும் விவசாயிகள் வளர்ச்சிக்கும் பாடுபடும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி ஒரே பிரதமர் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி என்றார்.
இது மட்டுமல்லாமல் மத்திய அரசு மூலம் பசு மாடுகளும் வெள்ளை ஆடுகளும் போன்றவைகள் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானிலும் பாஜக வென்றுள்ளது சத்தீஸ்கரில் வென்றுள்ளது மத்திய பிரதேசத்திலும் 80 இடங்கள் மேலாக தொடர்ந்து பாஜகவினர் வெற்றி பெற்று வருகின்றனர்.
இங்கு இருக்கிற அமைச்சர்கள் எல்லாம் ஒருவர் சாராயம் விற்பவர்களுக்கு துணையாக இருப்பவர் செஞ்சி மஸ்தான். அமைச்சர் சாராயம் சாவுக்கு காரணமானவர் .அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரக்காணத்தில் செங்கல்பட்டில் ஆகிய இரு இடங்களில் சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்துள்ளனர்
அது மட்டுமல்லாமல் இந்த சாராயத்தினால் பெண்கள் சம்பாதிக்கும் வருமானம் கரையான் அளிப்பது போல் டாஸ்மாக் அரித்து வருகிறது மேலும் தீபாவளிக்கு முதல் நாள் இந்த அரசு செய்த சாதனை என்னவென்றால் 44 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு சாராய ஆளை நடத்துபவர்களே அண்ணன் டி ஆர் பாலு எம்பி ஜெகத்ரட்சகன் இவர்களுக்காகவே இந்த டாஸ்மாக் வைக்கப்பட்டு வருமானம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ரூ.467 கோடி மது விற்பனை விற்கப்படுகிறது திராவிட ஆட்சியில் தீபாவளி முதல் நாள் என்றும் இரண்டாம் நாள் என்றும் இந்த திராவிடர்கள் ஆளை நடத்துவது சாராய ஆலை மூடும் வரை பெண்கள் யாரும் திராவிடத்திற்கு திமுகவிற்கு வாக்கு அளிக்க கூடாது என்றார்.
கல்வி வளர வேண்டும் என்றால் அந்த இடத்தில் சாராயம் கடை இருக்கக் கூடாது அதனால் தான் வருகின்ற 2014 ஒரு முறை பிரதமர் மோடி பிஜேபி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் தொடர்ந்து இங்கு இருக்கிற அமைச்சர் பொன்முடி இ.டி ரைடு பண்ணதுக்கு காரணம் என்னவென்றால் அவர் வீட்டில் 42 கோடி வாய்ப்பு நிதிக்கான ரசீதை எடுத்துள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் 41 லட்சத்து 57 ஆயிரத்திற்கு கொடுத்து வாங்கி 2022 இல் வெளிநாடுகளில் 110 கோடி நிறுவனம் விற்பனை செய்து உள்ளார் என்றார் தொடர்ந்து ஏழை எளிய மக்களை ஊழல் செய்து வஞ்சிக்கிற ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் செய்து வருகிறது.
அதனால் இந்த ஒரு முறை பாரதிய ஜனதா கட்சிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் தொடர்ந்து மூன்றாவது முறை பாரதியார் கட்சி நரேந்திர மோடி அவர்கள் பிரதம ஆவது உறுதி 400 இடங்களில் 39 இடங்கள் நாம் தமிழகத்திலிருந்து இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் நீங்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சி வாக்களிக்க வேண்டும் என்றார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.