ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் புதிய திருப்பம் : இயக்குநர்கள் உட்பட 70 பேரில் வங்கி கணக்குகள் முடக்கம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 10:30 am

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் உள்ளிட்ட 70 பேரின் வங்கி கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது.

ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் பாஸ்கர், மோகன் பாபு ஏற்கனவே கைதான நிலையில், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா வழக்கு விசாரணை அதிகாரியாக பொருளாதர குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆருத்ரா நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு லட்சம் பணம் கட்டினால் மாதம் ரூ.30 ஆயிரம் வட்டி தருவதாக விளம்பரம் செய்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை தொடங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10% முதல் 30% வரை வட்டி தருவதாகக் கூறி, ரூ.1,678 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 695

    0

    0