நேத்து தான் ஓபன் பண்ணோம்: இன்னைக்கு க்ளோஸ் அங்கன்வாடி மையத்தின் நிலை கண்டு பதறிய பெற்றோர்…!!

Author: Sudha
9 August 2024, 12:40 pm

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் விரிசல் விழுந்து, சேதமடைந்த நிலையில் இருப்பதால் அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோம்பைத்தொழு கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறக்கப்பட்டது. ஆனால் கதவு,ஜன்னல்,தாழ்வாரம் போன்ற பெரும்பாலான இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிய அங்கன்வாடிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் ஆர்வமுடன் வருகை தந்தனர்.புதிய கட்டிடத்தில் ஏற்பட்டுள்ளது விரிசல்களைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.எனவே பிள்ளைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர் மறுத்து விட்டனர்.எனவே திறக்கப்பட்ட மறுநாளே அங்கன்வாடி மையம் மூடப்பட்டது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!