அரசியல் பத்தி யோசிக்கல ஆனா அடுத்த சட்டமன்ற தேர்தலில்…? சஸ்பென்ஸ் வைத்த இயக்குநர் கிருத்திகா உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 6:51 pm

கடந்த சில மாதங்களாக சினிமா நிகழ்ச்சிகளை கடந்து பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் ஆர்வமுடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் செய்தியாளர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி கொண்டாடிய இயக்குநர் கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு மத்தியில் செய்தியாளர் ஒருவர், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், சிரித்துக்கொண்டே அதைப்பற்றியெல்லாம் யோசித்தது கூட கிடையாது என்றும் இப்படியெல்லாம் கேட்டால் தன்னிடம் பதில் இல்லை எனவும் கூறினார்.

வெறுமனே சினிமா நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

உதயநிதி ஸ்டாலினையே ஆரம்பத்தில் அரசியல் வேண்டாம் என்று சொன்னவர் பிறகு காலத்தின் தேவை கருதி கணவருக்கு கிரீன் சிக்னல் வழங்கினார்.

கிருத்திகா உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை தற்போது வெப் சீரிஸ்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் இயக்கிய ஒன்றிரண்டு திரைப்படங்களும் அவருக்கு திரையுலகில் தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!