ராகுல்காந்திக்கு அடுத்த நெருக்கடி : பாரத் யாத்திரைக்கு தடை? பாஜக கொடுத்த தலைவலி..!!
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி 2வது கட்டமாக ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை தொடங்க உள்ளார். இந்த யாத்திரை என்பது வரும் 14 ம் தேதி மணிப்பூரில் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த யாத்திரை மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவு நடைபெற உள்ளது. மொத்தம் 66 நாட்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் செய்து இந்த தொலைவை கடக்க உள்ளார். இந்த யாத்திரை என்பது மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 20ம் தேதி இந்த யாத்திரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை என்பது வரும் 14ம் தேதி மணிப்பூர் மாநிலம் ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் மணிப்பூரில் இந்த யாத்திரையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அங்குள்ள அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அனுமதி கோரிய கடிதம் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதாவது மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையேயான மோதல், வன்முறை என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் மணிப்பூரின் மோரே பகுதியில் புதிதாக வன்முறை நடந்தது. கடும் துப்பாக்கிச்சண்டை என்பது நடந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதனை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியின் யாத்திரைக்கு இன்னும் அனுமதி என்பது வழங்கப்படவில்லை. இதுபற்றி மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பீரன் சிங் கூறுகையில், ‛‛மாநிலத்தில் காவல்துறையின் செயல்பாட்டால் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலனை செய் வருகிறோம். இதுதொடர்பாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம். அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்ற பின் உறுதியான முடிவை எடுப்போம்” என்றார்.
இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கிருந்து நீதி யாத்திரை தொடங்கப்பட உள்ளது.
இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய காங்கிரசின் விண்ணப்பம் ஒப்புதல் கேட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் மத்திய அரசின் வேலையா?” என்று கேள்வி எழுப்பினார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.