அடுத்த அமைச்சர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி : அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி.. அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 7:23 pm

அடுத்த அமைச்சர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி : அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி.. அரசியலில் பரபரப்பு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இக்கூட்டணியில் காங்., கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆலம்கீர் ஆலம்,70 மீது ஊரக மேம்பாட்டு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அவரது வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ. 37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நடந்துள்ள பணமோசடி குறித்து ஆலம் கீர்ஆலம், அவரது தனிச்செயலர் சஞ்சீவ் லால் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

மேலும் படிக்க: அரசாணை எண் 66ஐ திரும்பப் பெற வேண்டும்.. வஞ்சம் வேணா.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

இதையடுத்து இன்று அமலாக்கத்துறை முன் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதில் ஆலம்கீர் ஆலமிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 364

    0

    0