அதிமுகவுக்கு அடுத்த அங்கீகாரம்… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு : உறுதியானது சின்னம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 9:13 pm

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தரப்ப்பில் இருந்து ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ் மகன் உசேன் சமர்பித்தார். இந்த நிலையில், அதிமுக வேட்பாளருக்கான ஏபி படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்குதேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.


குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம்அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Sexual Harassment to Famous TV Actress சின்னத்திரையிலும் பாலியல் சீண்டல்…பிரபல நடிகரின் மகள் சீரியலில் இருந்து விலகல்!