திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி… ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை : DMK FILES 2ஆம் பாகம் இன்று வெளியீடு?!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 9:47 am

கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று பிற்பகல் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஊழல் பட்டியல் பாகம்-2 ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று கவர்னரை சந்திக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் 2ம் கட்ட சொத்து பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக ஆளுநரிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது திமுகவினரிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 341

    0

    0